வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified வெள்ளி, 17 மார்ச் 2023 (11:10 IST)

தமிழகத்தில் இன்னும் 15 நாட்கள் மழை பெய்யும்: வெதர்மேன் தகவல்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதையும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வெதர்மேன் பிரதீப் ஜான் இன்னும் 15 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார். 
 
வரக்கூடிய நாட்களில் மூடுபனி இருக்காது என்றும் அடுத்த 15 நாட்கள் மழையின் தாக்கம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடலோர பகுதிகளில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மழை பெய்யும் என்று உள் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 10 முதல் 15 நாட்கள் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஆனால் அதே நேரத்தில் பரவலாக பெய்யும் மழை என்று சொல்ல முடியாது என்றும் ஆங்காங்கே மட்டும் பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வரும் நாட்களில் மேகமூட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கோடை நேரத்தில் மழை பெய்யும் என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran