தமிழகத்தின் திடீர் மழைக்கு என்ன காரணம்? வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
மேலும் இன்று சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமான மழை பெய்ததாகவும் சென்னையில் வேளச்சேரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் திடீரென கோடையில் மழை பெய்வதற்கு என்ன காரணம் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் தான் இந்த மழை பெய்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
மார்ச் 20 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இருப்பினும் தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் தான் மழை இருக்கும் என்றும் மாநிலம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்
Edited by Mahendran