1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (17:59 IST)

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மத்திய அரசு கடிதம்..!

corona
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கொரோனா தொற்று விகிதம் 1.99% உள்ளது என்று மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. 
 
இந்தியாவின் சராசரி கொரோனா தொற்று சதவிகிதத்தை விட தமிழகத்தில் கொரோனா தொற்று சதவிகிதம் அதிகமாக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறித்து கண்காணிப்பை அதிகரிக்க தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

Edited by Mahendran