வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:57 IST)

அதிமுக கூட்டணி மற்றுமல்ல… திமுக கூட்டணி பற்றியும் பேசிய முதல்வர்!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதிமுக கூட்டணிக்கு யார் தலைமை என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா பரவலால் உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருந்தாலும், சில நாடுகளில் தேர்தல்கள் நடந்து வருகின்றன. தென் கொரியாவில் சமூக இடைவெளியோடு தேர்தல் நடந்த நிலையில் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் தேர்தல் நடக்க உள்ளது.

அதே போல தமிழகத்திலும் அடுத்த் ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இப்போது இருக்கும் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இருக்குமா, கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் எழுப்பியபோது ‘இன்னும் தேர்தலே வரவில்லை. தேர்தல்,  வரும்போது அதுபற்றி தெரியவரும். அதிமுக கூட்டணி மட்டுமில்லாமல் திமுக கூட்டணியிலேயே இன்னும் எந்த கட்சிகள் இருக்கின்றன என்பது தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.