கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல் அறியாகி உள்ளன.
இதுகுறித்து தாசில்தார், வருவாய் துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்த நிலையில் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் நில அதிர்வு குறித்து கிராம மக்களிடம் தகவல் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
நில நடுக்கம் உணரப்பட்ட கிராமத்தில் பொதுமக்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதாகவும், தொடர்ந்து எந்தெந்த பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவினாலும், இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva