அடிமை அரசே! வலிக்காமல் வலியுறுத்தும் வெற்று கடிதங்கள் போதுமா? உதயநிதி ட்விட்!!
7 மாநில அரசுகளை போல NEET-JEE கூடாதென அதிமுக அரசும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி கோர்க்கை.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் இன்னும் முடியாத நிலையில் NEET, JEE தேர்வுகள் நடத்துவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இப்படியான இக்கட்டான சூழலில் நுழைவு தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது என்று மாநில அரசுகள் நுழைவு தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாக மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் சில தெரிவித்துள்ளன.
இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து, இந்த கொரோனா காலத்திலும் நீட் தேர்வை நடத்துவேன் என்று கோர முகம் காட்டுகிறது மத்திய அரசு. தங்கைகள் அனிதா, பிரதீபா என நீட் தேர்வு எழுதியவர்களையும் தேர்வுக்கு முன்பே சுபஸ்ரீயையும் பலி கொடுத்தது தமிழகம்.
எனவே, 7 மாநில அரசுகளைபோல NEET-JEE கூடாதென அடிமை அரசும் நீதிமன்றம் செல்ல வேண்டும். தமிழக மாணவர்கள் கடந்த ஆண்டை விட 13% குறைவாகவே நீட் எழுத விண்ணப்பித்துள்ளனர். இயல்பிலேயே தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வுக்கு, மொபைல்-இணையம் இல்லாத கிராமத்து மாணவர்கள் எப்படி தயாராவர்? வலிக்காமல் வலியுறுத்தும் வெற்று கடிதங்கள் வேலைக்காவாது என்பதை அடிமைகள் உணர்வது அவசியம் என பதிவிடுள்ளார்.