Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக ஸ்டாலின் தோல்வி!. கோவில்களில் வேண்டுதல் வைக்கும் துர்கா ஸ்டாலின்!...

Updated: செவ்வாய், 2 ஜூன் 2026 (20:22 IST)
அண்ணா. கருணாநிதி போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் துவங்கிய கட்சிதான் திராவிட முன்னேற்ற கழகம். ஆனால் மறைந்த கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவர். பல வருடங்களாகவே அவர் பல கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார்.

குறிப்பாக ஒவ்வொரு தேர்தலின் போதும் பல கோவில்களுக்கும் சென்று திமுக வெற்றி பெற வேண்டும் என்று அவர் வேண்டுவது வழக்கம்,. 2016ம் வருடம் முதல் 2021 வரை பல கோவில்களுக்கும் சென்று அடுத்த சட்டமன்ற தேர்தல் திமுக வெற்றி பெறுவதோடு, தனது கணவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என பல வேண்டுதல்களையும் செய்தார். பல பூஜைகளையும் செய்தார்..

அவர் ஆசைபட்ட படியே 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறினார். 2026ல் எப்படியும் தனது கணவரே மீண்டும் முதலமைச்சராக வருவார் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார் துர்கா. ஆனால் முடிவு வேறு மாதிரி இருந்தது.

திமுக ஆட்சி வராமல் போனதோடு, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முக ஸ்டாலின் தோல்வியடைந்தார். இது துர்கா ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதையடுத்து இனி வரும் காலங்களில்  முக ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும், திமுக வெற்றி பெற வேண்டும் என வேண்டுதல்களை முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களுக்கும் அவர் செல்ல துவங்கிவிட்டார்.

குறிப்பாக வேண்டுதல்களை நிமிட நேரத்தில் நிறைவேற்றும் கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலின் துர்கா சமீபத்தில் சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில்  வெளியாகியிருக்கிறது.<>

எல்லாம் காட்டு

மானை வேட்டையாடிய 3 பேரை என்கவுண்டர் செய்த வனத்துறை!....

அம்மாவ கேட்டாதான் அப்பா யாருன்னு தெரியும்!.. நயினார் நகேந்திரன் சர்ச்சை பேச்சு!...

தளபதி விஜய் சாலை!. முதல்வருக்கு வேறமாறி நன்றி சொன்ன கிராம மக்கள்!...

விஜயோட ஆசையே இதுதான்!. வெயிட் பண்ணி பாருங்க!.. ஹைப் ஏத்தும் எஸ்.ஏ.சி!..

திமுக இதைத்தான் பண்ணும்!. அத யூஸ் பண்ணிக்கலாம்!.. விஜய்க்கு ஐடியா கொடுத்த மாணிக்கம் தாகூர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments