தொடர்புடைய செய்திகள்
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு திமுக ஆதரவா? பாஜகவிடம் நெருங்குகிறதா திமுக?
- தவெக மீது அதிருப்தில் காங்கிரஸ்?!.. விஜயை ராகுல் சந்திக்காமல் போனதன் பின்னணி!..
- காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்காமல் போனது ஏன்?!.. எம்.பி. கிறிஸ்டோபர் விளக்கம்!..
- டெல்லியில் ராகுல், சோனியா காந்தியுடனான சந்திப்பை ரத்து செய்த முதல்வர் விஜய்.. பாஜக அழுத்தமா?
- ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..
திமுகவுக்கு அல்வா!. இந்தியா கூட்டணியில் தவெக?.. ராகுல்காந்தி போடும் ஸ்கெட்ச்!..
கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வந்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலின் போது எங்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் திமுகவுடன் கோரிக்கை வைத்தது. ஆனால் அந்த கோரிக்கையை திமுக நிராகரித்தது. ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு தமிழ்நாட்டுக்கு செட்டாகாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் பேட்டி கொடுத்தார்.
ஒருபக்கம் விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்க ராகுல் காந்தியின் விரும்பினார். பிரவீண் சக்ரவர்த்தி விஜயுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால் சோனியா காந்தி உள்ளிட்ட சில டெல்லி காங்கிரஸ் தலைவர்ர்கள் திமுகவுடன் பயணிப்பதே சரி என்ன சொல்ல திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. ஆனால் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவில்லை..
அதோடு தவெக ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை தேவைப்பட்டபோது காங்கிரஸ் முதல் ஆளாக திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. தற்போது அமைச்சரவிலும் இடம் பிடித்து விட்டது. இதன் மூலம் திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. அனேகமாக வருங்காலத்திலும் காங்கிரஸ் தவெக கூட்டணியில் நீடிக்கும் என்றே கருதப்படுகிறது.
இந்நிலையில்தான் இந்தியா கூட்டணியில் தவெகவை இணைக்கும் முடிவை ராகுல் காந்தி எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. வருகிற 8ம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் தவெக பங்கேற்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏனெனில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வந்த திமுக, திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இதுவரை அழைப்பு செல்லவில்லை. எனவே திமுகவுக்கு பதில் தவெகவை இந்திய கூட்டணியில் இடம் பெற செய்ய காங்கிரஸ் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
