Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் ட்ரோன்கள் பறக்கத் தடை: என்ன காரணம்?

Written By Siva
Updated: வியாழன், 8 ஜூன் 2023 (08:22 IST)
திருச்சியில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை என்று காவல்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர் வாரும் பணிகளை பார்வையதற்காக வருகை தரவுள்ளார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி திருச்சி நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இன்றும் நாளையும் திருச்சி மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். 
 
தடையை மீறி திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

தவெக எம்.எல்.ஏக்கள் மன்னர் பரம்பரை அல்ல!.. உதயநிதி Vs ஆதவ் அர்ஜுனா மோதல்!...

அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.. நெட்டிசன்களின் பதிவுகள் வைரல்..

2,500 நிரந்தர செவிலியர் பணியிடங்கள் .. தவெக அரசு அதிரடி அறிவிப்பு...

30 வயது இருந்தால் போதும்.. எல்லா மருத்துவ பரிசோதனைகளும் இலவசம்.. தவெக அரசு அதிரடி...

ஒரே ஒரு நாள் அமைச்சர்கள் தங்கள் குழந்தைகளை கிராமப்புற பள்ளிக்கு அனுப்பி பாருங்கள்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

அடுத்த கட்டுரையில்
Show comments