வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (19:59 IST)

நகராட்சி ஆணையரின் தொல்லையால் டிரைவர் தற்கொலை

ராமேஷ்வர  நகராட்சியில்  சுகாதார ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் நாகராஜ். இவர் 20 பது ஆண்டுகளுக்கு மேலாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கு நகராட்சி அதிகாரி தொடர்ந்து பணம் தரவேண்டும் என அழுத்தம் தந்ததால் வீட்டில் யாருகில்லாத நேரத்தில்    அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.
 
இதனைத்தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கையில்  நாகராஜின் வீட்டில் ஒரு டைரியை கைப்பற்றியுள்ளனர்.
 
அதில் எழுதியுள்ளதாவது:
 
ராமேஷ்வரம் நகராட்சி ஆணையரும் , சுகாதார ஆய்வாளரரும் மாதம்தோறும் என்னிடம் பணம் கேட்டு வாங்கி வந்தனர்.அப்படி பணம் கொடுக்க முடியாத போது எனக்கு அழுத்தம் தரத்தொடங்கினர் இதனால் தான் தற்கொலை செய்கிறேன் இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
போலீஸார் கையில் கிடைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.