காதலி இறந்த துக்கத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரத்தில் காதலி இறந்த துக்கத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சுசீந்தரன் என்ற இளைஞர் கல்லூரியில் படித்து வந்தார். சுசீந்திரனும் அதே கல்லூரியில் படித்து வந்த மாணவியும் காதலித்து வந்த நிலையில், அவரது காதலி சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்து போனார்.
காதலி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் இருந்த சுசீந்திரன், வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.