1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (09:18 IST)

பெற்றோர் சரக்கடிக்க பணம் தராததால் மகன் தற்கொலை

பெற்றோர் சரக்கடிக்க பணம் தராததால் மகன் தற்கொலை
பெரம்பலூரில் தாய் மதுகுடிக்க பணம் தராததால் மனமுடைந்த மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெரம்பலூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. பிரகாஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது மனைவி, பிரிந்து சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் தனது தாயுடன் வசித்து வந்த பிரகாஷ், வேலைக்கு செல்லாமல் குடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனது தாயிடம் பிரகாஷ் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் மது குடிக்க பணம் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பிரகாஷ் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
பெற்றோர் சரக்கடிக்க பணம் தராததால் மகன் தற்கொலை
 
அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், பிரகாஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.