ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 அக்டோபர் 2018 (16:14 IST)

நிர்வாணமாக நடக்க சொன்ன வார்டன்: ஜெயிலில் கைதி தற்கொலை

இங்கிலாந்தில் பெண் சிறைக்காவலர் கைதியை சக ஊழியர்கள் முன் நிர்வாணமாக நடக்க சொன்னதால் மனமுடைந்த கைதி சிறையிலேயே தற்கொலை செய்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கல்லூரியில் படித்து வரும் 21 வயதான கேட்டி ஆலன் மதுபோதையில் காரை ஓட்டிச்சென்று 15 வயதி சிறுவன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உடல்நலனில் முன்னேற்றம் கண்டுள்ளார். 
 
இதற்கிடையில் கேட்டி மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 16 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட கேட்டியை சிறை கண்காணிபாளர் சக ஊழியர்கள் முன்பு நிர்வாணமாக நடக்க வர்புறுத்தியதால் கேட்டி மனமுடைந்து சிறையிலேயே தற்கொலை செய்துக்கொண்டார். 
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.