1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2023 (23:04 IST)

கரூர் டெல்லி ஸ்வீட்ஸ் -ல் இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டி

Kaur
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் எண்ணத்தினை பிரதிபலித்த கரூர் டெல்லி ஸ்வீட்ஸ் நிர்வாகம் – அப்படி என்ன என்று பார்க்கீறீங்களா ? ஜல்லிக்கட்டிற்காக தனது நிறுவனத்தில் பிரமாண்டமாய் வைத்த இரட்டை மாடுகள் பூட்டிய வண்டி – ஏராளமானோர் செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்து உற்சாகம்.
 
கரூர் மாநகரை மையமாக கொண்டு இயங்கி வருகின்றது கரூர் டெல்லி ஸ்வீட்ஸ் நிர்வாகம், கரூர் பேருந்து நிலையம், கரூர் கோவை சாலை, ஜவஹர் பஜார், காந்திகிராமம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட கிளைகளை கொண்ட இந்த டெல்லி ஸ்வீட்ஸ் தமிழக அளவில் மட்டுமில்லாமல், இதன் ருசி தனி ரசனை தான், கடந்த 25 வருடங்களாக செயல்படும் இந்த உணவகத்தில் கிடைக்காத ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகளே கிடையாது.

இந்த ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் வருடா வருடம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தை மாதம் பிறக்கும் முன்னரே, இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியினை ஒரு சிற்பம் போல வடிவமைத்து தமிழர்களின் உணர்வுகளுக்கும், தமிழ் உணர்விற்கும் மதிப்பு கொடுத்து வரும் நிலையில், இந்த ஆண்டும் கரூர் கோவை சாலையில் உள்ள டெல்லி ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டும், மாட்டு பொங்கலை முன்னிட்டும் தமிழர்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் கரூர் டெல்லி ஸ்வீட்ஸ் ல் இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட  மாட்டு வண்டி அமைக்கப்பட்டு அதன் முன்னர் பொதுமக்கள்  ஏராளமானோர் செல்பி எடுத்து வருகின்றனர். பிரபல மாடு பிடி வீரரும், கரூர் அதிமுக நிர்வாகியுமான சாந்தி மெஸ் உரிமையாளர் பூமிநாதன் அவர்களும் செல்பி எடுத்து கொண்டார். மேலும், ஜல்லிகட்டு நிகழ்ச்சிகள் கரூர் மாவட்டம் ஆர்.டி மலை என்கின்ற பகுதியில் அதுவும் திருச்சி எல்லை அருகே நடக்கின்றது.

மதுரையில் 4 தினங்களாக நடைபெறுகின்றது. மற்ற மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியினை டி.வி நிகழ்ச்சியிலும், நேரிலும் சென்று தான் பார்க்க வேண்டுமே தவிர கரூரில் இன்றுவரை நடைபெறவில்லை, இந்நிலையில், இந்த இரட்டை மாடு பூட்டப்பட்ட வண்டியின் முன்புறம் ஏராளமான பொதுமக்கள் தங்களது செல்போன் கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர்.