வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (21:46 IST)

யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்த தான முகாம்!

blood donation
யூத் ரெட் கிராஸ் சார்பில் கரூர் அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி)யில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்,  50 மாணவ மாணவியர்கள் தங்களது இரத்தத்தைத் தானமாக வழங்கினர்.

இரத்ததான முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் சு.கெளசல்யாதேவி தொடங்கி வைத்தார். இந்தியன் ரெட் கிராஸ் கரூர் மாவட்டத் தலைவர் என்ஜினியர் இராமநாதன் இந்தியன் ரெட் கிராஸ் கரூர் மாவட்டச் செயலர் வில்லியம்ஸ் திருமூர்த்தி ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.

தானமாகப் பெறப்பட்ட இரத்தத்தை உதவிப் பேராசிரியர் மற்றும் மருத்துவர் அறிவழகன் தலைமையில் வந்த குழுவினர் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். முகாம் ஏற்பாடுகளை யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இரா.லட்சுமணசிங் செய்தார். இரத்ததானம் வழங்கிய தன்னார்வத் தொண்டர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.