வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (12:01 IST)

உருமாறிய கொரோனாவ நினைச்சி யாரும் பயப்படாதீங்க...

உருமாறிய கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் தகவல். 
 
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு கிட்டத்தட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தியில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
 
புது கொரோனா வைரஸ் முன்பு இருந்த வைரஸ் வகையை விடவும் 70% வேகமாக பரவக்கூடியது என நம்பப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் 60% தொற்று, இந்த வகை வைரஸால் ஏற்பட்டிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கும் இந்தியா முழுவது 6 பேருக்கும் உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உருமாறிய கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை; முன்னெச்சரிக்கையோடு இருப்பதே அவசியம். முந்தைய கொரோனா வைரஸுக்கும் உருமாறிய வைரஸுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை என டி.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.