1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:54 IST)

முரளிதரனின் சாதனையை தகர்த்த அஸ்வின் – நடுங்கும் இடக்கை பேட்ஸ்மேன்கள்!

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் இடதுகை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கியதில் முரளிதரனின் சாதனையை தகர்த்துள்ளார்.

இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகிறார். இதுவரை 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 375 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதில் இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட் மற்றும் 192 ஆகும்.

இதற்கு முன்னர் முத்தையா முரளிதரன் 191 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். அவரது சாதனையை இன்றைய போட்டியில் ஹேசில்வுட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தகர்த்துள்ளார் அஸ்வின்.