1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:46 IST)

வெற்றிமாறன் படத்தில் இருந்து பாரதிராஜா விலக இதுதான் காரணமாம் – இப்படி ஒரு சோகமா?

இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா வெற்றிமாறன் இயக்கும் படத்தில் இருந்து விலகியுள்ளதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வருகிறார் வெற்றிமாறன். கடைசியாக அவர் இயக்கிய அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போது கோல்டன் க்ளோப் விருது வரை சென்றுள்ளது. இதையடுத்து அவர் இயக்கும் திரைப்படத்தில் சூரியும், பாரதிராஜாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த படத்துக்காக முதல் முதலாக வெற்றிமாறன் இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்காக சத்தியமங்கலம் காடுகளில் சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. அதில் கலந்துகொண்ட பாரதிராஜா அந்த படத்திலிருந்து விலகுவதாக செய்திகள் வெளியானது. இதனால் படக்குழுவினரோடு அவருக்கு ஏதேனும் பிரச்ச்சனையோ என சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் அப்படி எல்லாம் எதுவும் இல்லையாம். டிசம்பர் ஜனவரி மாதங்களில் சமவெளிப்பகுதியிலேயே குளிர் அதிகமாக இருக்கும். இந்நிலையில் காடுகளில் முழுப் படப்பிடிப்பும் நடக்க உள்ளதால் பாரதிராஜாவால் வயோதிகத்தின் காரணமாக குளிரை தாங்க முடியாத சூழல் உருவாகவே அப்படத்தில் அவர் விலகினாராம்.