வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:59 IST)

நான் கட்சி தொடங்கல.. என்ன மன்னிச்சிடுங்க! – ரஜினி திடீர் அறிவிப்பால் பரபரப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி தொடங்க முயற்சிகளை மேற்கொண்டு வந்த ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தை ரஜினிகாந்த் கை விடுவதாக அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடர்பான பணிகளில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது உடல்நல குறைவால் ஓய்வில் உள்ளார். எனினும் கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவை திட்டமிட்டபடி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், தன்னால் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லை என்றும், அதனால் அரசியல் கட்சி தொடங்குவதை கை விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதை மிகவும் மன வேதனையுடன் அறிவிப்பதாக கூறியுள்ள அவர் தன்னை நம்பி உள்ளவர்களை படுகுழியில் தள்ள விரும்பவில்லை என்றும், தன்னாலான உதவிகளை மக்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு செய்வதாகவும் கூறியுள்ள அவர், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த திடீர் அறிவிப்பு ரஜினி மக்கள் மன்றத்தினரை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.