திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (10:23 IST)

புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: திமுக வெளிநடப்பு!

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். 

 
சமீபத்தில் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ரூ.3,613 கோடிக்கு பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் ரங்கசாமி தாக்கல் செய்தார். 
 
இந்நிலையில் புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததை கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பாஜகவின் கைப்பாவையாக முதல்வர் ரங்கசாமி செயல்படுவதாக திமுக எம்.எல்.ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.