திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 18 மார்ச் 2022 (13:15 IST)

அதிமுக வெளிநடப்பு - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்!

அதிமுகவினர் வெளிநடப்பு செய்தது குறித்தது சட்டபேரவையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். 

 
பட்ஜெட் தாக்கலுக்கு முன் பேச வாய்ப்பு கோரி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட் உரை முடிந்ததும் பேச வாய்ப்பளிப்பதாக அதிமுக எம்எல்ஏக்களிடம் உறுதி அளித்தார். அத்துடன் பட்ஜெட் உரையை கேட்குமாறு அதிமுகவினருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்து தமிழக பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் அதிமுக உறுப்பினர்கள். 
 
இந்நிலையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தது குறித்தது சட்டபேரவையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்யாமல் சட்டபேரவையில் அமர்ந்திருந்தால் ஊழல் தடுப்பு துறை வலுப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை கேட்டப்பிறகு நிச்சயம் வெளிநடப்பு செய்திருப்பார்கள் என தெரிவித்தார்.