மேலும் ஒரு திமுக எம் எல் ஏ வுக்கு கொரோனா – குடும்பத்திலும் 3 பேருக்கு பாதிப்பு!
ரிஷிவந்தியம் தொகுதி எம் எல் ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. இதுவரை தமிழகத்தில் எண்ணிக்கை 56,000 க்கு மேல் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் சில அரசியல் பிரமுகர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே திமுகவின் ஜெ அன்பழகன் மற்றும் பலராமன் ஆகியோர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ரிஷிவந்தியம் தொகுதி எம் எல் ஏவான வசந்தம் கார்த்திக்கேயனுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வருடைய குடும்பத்தினர் 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக சொல்லப்படுகிறது.