திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஜூன் 2020 (17:49 IST)

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தடை –ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரசிகர்கள் செய்த உதவி!

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் எல்லையில் நடந்த சண்டையில் மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதியான நாளைக் கொண்டாடப் பட இருக்கிறது. அதனை ரசிகர்கள் மிகப்பிரம்மாண்டமாக ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சம் மக்களிடையே நிலவும் நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள், செய்தித்தாள் வாழ்த்துகள் ஆகியவற்றை அளிப்பதைத் தவிர்த்து பத்திரமாக இருக்க வேண்டும் எனத் தனது ரசிகர்மன்ற நிர்வாகி மூலமாக அனைத்து மன்றங்களும் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒரு சிறப்பான நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். லடாக் எல்லையில் சீன ராணுவத்தோடு நடந்த சண்டையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்பவர் வீர மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு உதவும் விதமாக விஜய் ரசிகர்கள் ஒரு லட்ச ரூபாய் அனுப்பியுள்ளனர். இது சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்களுக்குப் பாராட்டு கிடைத்து வருகிறது.