திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 21 ஜூன் 2020 (15:38 IST)

தங்கத்தில் கல்யாண மாஸ்க் – டிக்டாக்கில் வைரலாகும் வீடியோ!

கொரோனாவால் அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் தங்கத்தால் ஆன மாஸ்க்குகளை திண்டிவனத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் உருவாக்கி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக மாஸ்க்குகள் அணிய சொல்லி மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால் இந்த மாஸ்க்குகளால் வைரஸ் பரவலைத் தடுக்க முடியாது என்றும் N 95 மாஸ்க்குகள் அணிந்தால்தான் வைரஸ் தொற்றை தடுக்க முடியும் என சொல்லப்படுகிறது. ஆனாலும் மக்கள் இப்போது அதிகளவில் மாஸ்க்குகள் அணிய ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் திண்டிவனத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் தங்கத்தாலான மாஸ்க்குகளை வடிவமைத்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். இது சம்மந்தமாக மணமக்கள் அணியும் விதத்தில் 4 கிராம் மற்றும் 3 கிராம் எடையில் மாஸ்க்குகளை உருவாக்கியுள்ளார். இது சம்மந்தமாக வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவேற்ற அவை இப்போது வைரலாகி வருகின்றன. இந்த மாஸ்க்கில் உள்ள தங்க இழைகளை பின்னர் உருக்கி நகைகள் செய்துகொள்ளலாம் என அவர் சொல்லியுள்ளார்.