வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (13:13 IST)

திமுகவில் தாழ்த்தப்பட்டோருக்கு தனி கிளை! – சர்ச்சையை கிளப்பிய நிர்வாகி!

திமுகவில் தாழ்த்தப்பட்டோருக்கு தனி கிளை உருவாக்க வேண்டுமென திமுக நிர்வாகி ஒருவர் பேசியது மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

சமீபத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதியாக பதவி வகிப்பது குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் தவறான கண்ணோட்டத்தில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதிக்கு மக்கள் நீதி மய்யம், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் திருச்சியில் மாவட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய மாவட்ட நிர்வாகி வைரமணி, தாழ்த்தப்பட்ட மக்கள் 80 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இன்றைக்கு தாழ்த்தப்பட்டோர் சுயமரியாதையோடு வாழ திமுகவே காரணம். எனவே தாழ்த்தப்பட்டோருக்கு தனி கிளையை உருவாக்க வேண்டும்’ என பேசியுள்ளார்.

ஏற்கனவே ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது திமுக நிர்வாகியின் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அரசியலமைப்பு சட்டத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் திமுகதான் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு காரணம் என அடிக்கடி சொல்லி கொண்டிருப்பானேன் என தலித்திய கட்சிகளிடையே திமுக குறித்து அபிவிருத்தி ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.