நீலகிரியில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் வரும் பிரதமர் மோடி சில உறுதிமொழிகளை தர வேண்டும் என பேசியுள்ளார்.
பாம்பனில் கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தை திறந்து வைக்க இன்று பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தல் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளுக்காக அவர் நீலகிரிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர் “பிரதமர் மோடி தமிழ் மீதும், தமிழர்கள் மீது அக்கறை உள்ளவராக இருந்தால் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையாது என்று இன்றைக்கு தமிழ் மண்ணிலேயே வைத்து உறுதிமொழி தர வேண்டும்.
தற்போது தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளபோதே நம்மை பேச விட மாட்டேன்கிறார்கள். நம்மை நசுக்கவும், காணாமல் செய்யவும் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டின் பிரச்சினையை மட்டுமல்லாது இந்தி திணிப்பு உட்பட இந்தியாவின் பிரச்சினைகளை திமுக எம்.பிக்கள் பேசுகிறார்கள். அதனால்தான் அவர்களை ஒழிக்க நினைக்கிறது பாஜக” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K