1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 30 ஜூலை 2018 (06:31 IST)

மூன்றாவது நாளாக காவேரி மருத்துவமனையில் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 
ஒவ்வொரு நாள் மாலை காவேரி மருத்துவமனை கருணாநிதி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டு வருகிறது. நேற்று இரவு மருத்துவ அறிக்கை வெளியாக சற்று தாமதமானது. அதில் கருணாநிதியின் உடல்நிலை சற்று நலிவு ஏற்பட்டதாகவும் பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதன் மூலம் அவர் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
 
ஏராளமான திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். நேற்று இரவு கொட்டும் மழையிலும் தொண்டனர் குவித்தனர். எழுந்து வா தலைவா என்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.
 
இதைத்தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது. தொண்டர்கள் யாரும் எவ்வித அசம்பாவிதம் செய்ய வேண்டாம் என்றும் கலைந்து செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
 
தொண்டர்கள் கூட்டம் அதிகமான காரணத்தினால் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின்னரே தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல தொடங்கினர்.
 
இருந்தும் தற்போது திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வாயிலிலே படுத்து உறங்கி கிடக்கின்றனர்.