திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 30 ஜூலை 2018 (01:35 IST)

காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் காவேரி மருத்துவமனை வருகை

காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளதால் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் காவல் பணி குறித்து அறிய வருகை தந்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது. இன்று மருத்துவ அறிக்கையை வெளியிட்ட காவிரி மருத்துவமனை கருணாநிதி உடல்நலம் சீராக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் தலைவர் கருணாநிதியை காண ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொண்டர்களிடையே பேசினார். ஆனால் தொண்டர்கள் அங்கிருந்து செல்லவில்லை.
 
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு வேண்டுக்கோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். மு.க.அழகிரி, அப்பா நலமாக உள்ளார் என்று கூறினார். இருந்தபோது தொண்டர்கள் காவேரி மருவத்துவமனை வாயிலில் இருந்து கலைந்து செல்ல மறுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். தொண்டர்கள் அதிக அளவில் குவிந்துள்ளதால் பாதுகாப்பு பணி குறித்து அறிய மருத்துவமனை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.