வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 ஜூலை 2018 (05:59 IST)

கல்லூரிகள் இன்று விடுமுறையா? அண்ணா பல்கலை விளக்கம்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை பின்னடைவு, முன்னேற்றம் என மாறி மாறி இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என ஒருசில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளீயாகியது.
 
ஆனால் இந்த செய்திகள் உண்மையல்ல என்றும், வெறும் வதந்தி என்றும், உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (30-07-2018) விடுமுறை என பரவிய தகவல் தவறானது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே இன்று வழக்கம்போல் கல்லூரிகள் இயங்கும் என தெரிகிறது.