வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஜூலை 2018 (23:53 IST)

திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு பின்னர் அந்த பின்னடைவு சரிசெய்யப்பட்டுவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில் மருத்துவமனை முன் கூடியிருக்கும் திமுக தொண்டர்கள் கலைந்து செல்லுமாறும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில், 'காவேரி மருத்துவமனை அளித்த அறிக்கையின் படி, தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், தற்போது தலைவர் நலமாக, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். ஆகவே, கழகத் தோழர்கள் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காமல், அமைதி காக்க வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
 
இதனையடுத்து ஓரளவு தொண்டர்கள் கலைந்து சென்றாலும் இன்னும் பெரும்பாலான தொண்டர்கள் காவேரி மருத்துவமனை அருகே உள்ளனர்.