வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (10:59 IST)

திமுக முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சியில் கட்சியினர்!

திமுகவைச் சேர்ந்த ரகுமான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுக முன்னணித் தலைவர் ரகுமான் கான்.  1977, 1980, 1984 மற்றும்1989 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி கண்டவர். அதுமட்டுமில்லாமல் 1996இல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதையடுத்து  சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.