செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (10:47 IST)

பிரபல நடிகரின் அம்மா அப்பா இருவருக்கும் கொரோனா! அதிர்ச்சியில் குடும்பம்!

சென்னை 28 புகழ் நடிகர் விஜய் வசந்தின் தந்தை மற்றும் தாய் இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு சிலர் மட்டுமே குணமாகி வந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்த குமார் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார் எம்பி அவர்களுக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து இப்போது அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.