திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (12:50 IST)

ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது என்பதும் தேர்தல் பிரச்சார முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மத்தியில் உள்ள பாஜக அதிரடியாக எதிர்க் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் பயமுறுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது 
 
இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டிலும் திமுக வேட்பாளர்கள் மோகன் மற்றும் செந்தில்பாலாஜி வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. பாஜக அரசின் உந்துதல் காரணமாக எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னால் வருமானவரித்துறையினர் சோதனை நடைபெறுவதாக திமுக அந்த புகாரில் குறிப்பிட்டு உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்