வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (14:00 IST)

திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களா? பரபரப்பு தகவல்

திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களா?
தமிழகத்தில் வரும் 26-ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து திமுக, அதிமுக வேட்பாளர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. இதில் திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
 
திமுக வேட்பாளர்கள் மூவரும் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் இருந்து அவர்களுடைய சொத்துக்கள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. குறிப்பாக மூவருமே கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடைய சொத்துக்களை விபரம் பின்வருமாறு:
 
திருச்சி சிவா: இவரது குடும்பத்திற்கு மொத்தம் 4.81 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. இவர் பெயரில், 1.60 கோடி ரூபாய் சொத்துக்களும், இவரது மனைவி பெயரில், 37.65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அசையும் சொத்துக்கள் உள்ளன. மேலும் இவார்து பெயரில், 2.62 கோடி ரூபாய் மற்றும் மனைவி பெயரில், 20.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்துக்கள் உள்ளன. 
 
செல்வராஜ்: இவரது பெயரில், 33.32 லட்சம் ரூபாய் மற்றும் இவரது மனைவி பெயரில், 5.55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், இவரது பெயரில், 68.50 லட்சம் ரூபாய் மற்றும் இவரது மனைவி பெயரில், 83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்துக்களும் என, மொத்தம் 1.90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்  உள்ளது.
 
என்.ஆர். இளங்கோ: இவரது பெயரில் 1.81 கோடி ரூபாய் மற்றும் இவரது மனைவி பெயரில், 45.54 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், இவர் பெயரில், 3.10 கோடி, மனைவி பெயரில், 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் என, மொத்தம், 7.86 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது.