செவ்வாய், 17 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 பிப்ரவரி 2026 (10:50 IST)

ரயில் பயணிகள் கவனத்திற்கு: மதுரை வழித்தடத்தில் 3 முக்கிய ரயில்கள் பாதை மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு: மதுரை வழித்தடத்தில் 3 முக்கிய ரயில்கள் பாதை மாற்றம்!
மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற உள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, அந்த வழியாக செல்லும் 3 முக்கிய விரைவு ரயில்கள் பிப்ரவரி மாதத்தில் மாற்று பாதையில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்:
 
1. நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் (16352): பிப்ரவரி 5, 8, 12, 15, 19, 22 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் செல்லும்.
 
2. கன்னியாகுமரி - ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் (12666): பிப்ரவரி 7, 14, 21, 28 ஆகிய சனிக்கிழமைகளில் மாற்றுப் பாதையில் செல்லும்.
 
3. கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயில் (07229): பிப்ரவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
 
இந்த ரயில்கள் வழக்கமாக செல்லும் திண்டுக்கல், கொடைக்கானல் சாலை வழியாக செல்லாமல், விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.
 
பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் அருப்புக்கோட்டை உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றத்தால் பயணிகள் தங்கள் பயண திட்டத்தை சரிபார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva