கருணாநிதி உடல்நிலை: மருத்துவமனை முன் மொட்டை அடிக்கும் திமுக தொண்டர்கள்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்றிரவு தற்காலிகமாக பின்னடைவில் இருந்தாலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு காரணமாக தற்போது அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவர்களின் அறிக்கை கூறி வருகிறது.
இந்த நிலையில் திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் காவேரி மருத்துவமனை முன் விடிய விடிய காத்திருந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைய வேண்டி காவேரி மருத்துவமனை அருகே திமுக தொண்டர்கள் தற்போது மொட்டை அடித்து வருகின்றனர். மொட்டை அடித்தால் தங்கள் தலைவர் மீண்டும் குணமாகி வருவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தொண்டர்களின் வேண்டுதலினால் நிச்சயம் தலைவர் கலைஞர் எழுந்து வந்து தொண்டர்களை பார்த்து கையசைப்பார் என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்