வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 30 ஜூலை 2018 (06:44 IST)

பதற்றத்தை ஏற்படுத்திய மருத்துவ அறிக்கையும் முதல்வர் வருகையும்!

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று இரவு முதல் தற்போது சில நிகழ்வுகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
 
காவேரி மருத்துவமனை சார்பில் கருணாநிதி உடல்நிலை குறித்து வெளியிடப்படும் மருத்துவ அறிக்கை தாமதமாகவே வெளியானது. கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் வரிசையாக வருகை தந்தனர். அதிலும் கருணாநிதி உடல்நிலை சற்று நலிவு அடைந்ததாகவும் பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததன் மூலம் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு வேண்டுக்கோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். காவல்துறையினர் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் உள்ள அவரது விழாக்களை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக சென்னை திரும்பினார். 
 
இந்த அனைத்து நிகழ்வுகளும் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த பதற்றம் நேற்று இரவு முதல் தொடங்கி தற்போது வரை தொடருகிறது.