திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 30 ஜூலை 2018 (07:37 IST)

கருணாநிதி பற்றி நான் எதுவும் கூறவில்லை: யோகி பாபு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் எந்த கருத்தும் கூறவில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

 
யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர். தனது விடா முயற்சியால் இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது இவர் நயன்தாரா, விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி எந்த கருத்தும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-
 
என் பெயரில் பல போலி ட்விட்டர் கணக்குகள் உருவாகியுள்ளது. நான் கருணாநிதி, ஓபிஎஸ் அவர்களை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை. என்னைப் பற்றி போலியான செய்திகள் உலாவி வருகிறது. யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.