திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 ஜூலை 2018 (07:26 IST)

போராளி என்ற வார்த்தை கருணாநிதியையே சாரும்: விஷால்

திமுக தலைவர் கருணாநிதி மூன்றாவது நாளாக இன்றும் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறி வருகின்றன.
 
இந்த நிலையில் கருணாநிதி குறித்து நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க செயலாளருமான விஷால் தனது டுவிட்டரில் கூறியதாவது: 
 
இப்போதிலிருந்து போராளி என்ற வார்த்தை கலைஞர் கருணாநிதியையே சாரும். இரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த நாள்வரை அந்த வார்த்தையை சொல்கிறார். ஒருபோதும் அவர் நம்பிக்கையை இழக்காமல் வாழ்ந்து வருகிறார். என்ன உத்வேகமான மனிதர். வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் வித்தியாசமான கோணத்தில் நீங்கள் எனக்கு வழங்கினீர்கள். அன்புள்ள தலைவரே, நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன்.
 
நடிகர் சங்கத்தின் சார்ப்பிலும், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பிலும் ஏற்கனவே கருணாநிதியின் உடல்நிலையை காவேரி மருத்துவமனை சென்று விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.