வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (08:50 IST)

கடலூரில் தேமுதிக நிர்வாகி வெட்டிக் கொலை ! – காதலித்த பெண்ணின் அண்ணன் செய்த கொடூரம் !

தன்னுடைய தங்கையைக் காதலித்த வாலிபரை தனது நண்பர்களோடு இணைந்து ஆனந்தராஜ் என்ற வாலிபர் வெட்டிக் கொன்றுள்ளார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் வசித்து வந்த ஜனார்த்தனன் என்ற வாலிபர் அப்பகுதி தேமுதிக நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் இவரைக் காதலித்துள்ளார். இதனால் இருவரும் ஜோடியாக வெளி இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் அண்ணனான ஆனந்தராஜுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஆனந்தராஜ் தனது தங்கையுடன் பழகுவதை நிறுத்த சொல்லி ஜனார்த்தனை மிரட்டியுள்ளார். ஆனாலும் ஜனார்த்தனன் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் நேற்று முன் தினம் நள்ளிரவு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜனார்த்தனனை தனது நண்பர்களோடு ஆனந்தராஜ் கத்தியால் சரமாடியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் ஜனார்த்தனனை வெட்டுக்காயங்களோடு குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் ஜனார்த்தனன் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் கடலூர் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.