புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (14:50 IST)

”ஜனவரியில் சிங்கம் போல் வருவார் விஜயகாந்த்”.. மீண்டும் களத்தில் விஜயகாந்த்

தனது தந்தை ஜனவரி மாதத்தில் சிங்கம் போல் உருவெடுத்து மீண்டும் அரசியலில் தீவிரமாக களமாடுவார் என விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.

நேற்று தேமுதிக. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி, ஆம்பூரில் அக்கட்சியின் சார்பில் பொதுகூட்டம் நடந்தது. அதில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்  ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதனையடுத்து மேடையில் பேசிய விஜய பிரபாகரன், எதிர்கட்சி தலைவர்கள் வேண்டுமென்றே தந்தையின் உடல்நிலையை பற்றி வதந்திகள் பரப்பி வருகிறார்கள். வரும் ஜனவரி மாதம் முதல் சிங்கம் போல் சிலிர்தெழுந்து தீவிர அரசியலில் ஈடுபடுவார் என கூறினார். மேலும் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு பிரேமலதா கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அயராது உழைத்து கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் எனவும் கூறினார்.

விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது இரண்டு மகன்களும் 60 லட்சம் மதிப்புள்ள ஒரு பி.எம்.டபுள்யூ காரை விஜயகாந்திற்கு பரிசளித்த தகவல் குறிப்பிடத்தக்கது.