திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (12:37 IST)

எதிர்பார்க்கவே இல்லை.. விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஜோகோவிச்!

MK Stalin Djokovic
அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


 
தமிழகத்தில் திமுக அரசு அமைந்த நிலையில் தமிழக பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய செய்வதே தன் இலட்சியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார், அதையடுத்து முதலீடுகளை ஈர்க்க முன்னதாக அரபு அமீரகம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க 8 நாட்கள் பயணமாக புறப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் செல்லும் விமானத்தில் எதேச்சையாக செர்பிய நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச்சை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் அதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “வானில் நிகழ்ந்த ஆச்சர்யம்: ஸ்பெயின் செல்லும் வழியில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்தேன்” என பதிவிட்டுள்ளார்.

Edit by Prasanth.K