ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 20 ஜனவரி 2024 (23:06 IST)

மாநாட்டுத் திடலை வந்தடைந்த 1000 இரு சக்கர வாகனங்களின் பேரணி

dmk
திமுக இளைஞரணி மாநாடு-ன் 2-ஆவது மாநில மாநாடு சேலத்தில்  நாளை நடைபெறவுள்ள நிலையில்  சென்னையில் இருந்து தொடங்கிய டி.எம்.கே ரைடர்ஸ்-ன் 1000 இருசக்கர வாகனங்களாகப் பெருகி இன்று மாலை மாநாட்டுத் திடலை வந்தடைந்தது.
 
திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு நாளை சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்த நாயக்கன் பாளையத்தில் பிரமாண்டமாக நடக்கிறது.

இதில், பங்கேற்பதற்காக இன்று மாலை விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சேலம் வந்தடைந்தனர்.

அங்கு கே.என். நேரு சார்பில் இருவருக்கும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் உரையாடுகின்றனர். பின்னர்,  சென்னையில் இருந்து புறப்பட்ட சுடர் தீபம் ஒப்படைக்கப்பட்டது.

100 இருசக்கர வாகனங்களுடன் சென்னையில் இருந்து தொடங்கிய டி.எம்.கே ரைடர்ஸ்-ன் 1000 இருசக்கர வாகனங்களாகப் பெருகி இன்று மாலை மாநாட்டுத் திடலை வந்தடைந்தது என்று அமைச்சர்  உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

’’நம் இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாட்டின் நோக்கத்தை விளக்கி, குமரி முனையில் உள்ள அய்யன் வள்ளுவரின் சிலை அருகே 100 #DMKRiders-களுடன் இருசக்கர வாகனப் பேரணிப் புறப்பட்டது. 
 
அந்தப்பேரணி 1000 இருசக்கர வாகனங்களாகப் பெருகி இன்று மாலை மாநாட்டுத் திடலை வந்தடைந்தது.
 
தமிழ்நாட்டை வள்ளுவர் - பெரியார் - அண்ணா - கலைஞர் மண்டலங்களாக வகுத்துக் கொண்டு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வழியாக வெயிலிலும், மழையிலும் பயணித்து வந்துள்ளது இந்த வாகன அணிவகுப்பு.
 
மாநாட்டுத் திடலில் DMK Riders-இன் அணிவகுப்பு மரியாதையை நமது கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
 
இந்த நெடும்பயணத்தை கொள்கை உறுதியோடு மேற்கொண்ட DMK Riders-க்கு என் அன்பும், வாழ்த்தும்’’என்று தெரிவித்துள்ளார்.