வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (20:36 IST)

காவல்துறையின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை தொடங்கி வைத்த முதல்வர்

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களைக் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 21 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 நவீன நெல் சேமிப்பு தளங்களைத் திறந்து, பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கினேன்.

மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பாக சேவைபுரிந்தவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கினேன். பெரியபாளையம் - அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், மேல்மலையனூர் - அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், ஆனைமலை - அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன். சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணைகள் மற்றும் ஜவுளி தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 17 தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகையாக 9.25 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினேன்.