வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (13:00 IST)

ஜன.27-ல் ஸ்பெயின் புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்.! முதலீடுகளை ஈர்க்கவும் தொழில் நிறுவனங்களை சந்திக்கவும் திட்டம்..!

stalin cm
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 27 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார்.
 
தமிழகத்தின் பொருளாதாரம் 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரு லட்சிய இலக்கினை நிர்ணயித்துள்ளார். இதன் முன்னோட்டமாக  சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
 
மேலும் இந்த மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவில் 6,64,180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள்,  26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
 
இந்நிலையில் மேலும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், வருகிற 27ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். 

 
அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், முதலீடுகளை ஈர்க்கவும் தொழில் நிறுவனங்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு, பிப்ரவரி 12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.