1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified புதன், 21 செப்டம்பர் 2022 (09:54 IST)

தீபாவளி பண்டிகை - அரசுப் பேருந்துகளிலும் முன்பதிவு தொடக்கம்

bus
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ரயிலில் முன்பதிவு செய்யும் தேதி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது பேருந்துகளில் முன்பதிவு செய்யும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்கேற்ப அக்டோபர் 21ஆம் தேதிக்கான முன்பதிவு அரசு பேருந்துகளில் இன்று முதல் தொடக்கம் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்கள் https://www.tnstc.in/ என்ற இணையதளம் மூலம் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
 
கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.