ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: திங்கள், 12 செப்டம்பர் 2022 (20:54 IST)

அஜித்தை பற்றி மேலாளர் புகழ்ந்து பதிவிட்ட புகைப்படம் .....செம வைரல்

ajithkumar
அஜித்தின் மேனேஜர் வெளியிட்டுள்ள ஒரு புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

 
அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறத். இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தியதாகவும், அதன் பின், விசாசகபட்டினத்திலும் இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதற்கிடையே, இப்படத்திற்கு பண உதவி செய்து வந்த அன்புச்செழியன் வீட்டிலும் அலுவலகத்திலும் ஐடி ரெய்ட்  நடத்தப்பட்டதால் அவர் அஜித்61 படத்திற்கு தற்போது பண உதவி செய்யவில்லை என்றும் இது தாமதமாகலாம் என்று தகவல் வெளியானது.

அதனால்,  நடிகர் அஜித்குமார்,  மஞ்சு வாரியார் அவர்களின் நண்பர்கள் இணைந்து வட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, தன் டுவிட்டர் பக்கத்தில், மேன் அன்ட்   தி மெசின்'' என்ற கேப்சன் பதிவிட்டு,  நடிகர் அஜித்குமார் பைக்குடன் நிற்பது போன்ற புகைப்படம் பதிவிட்டுள்ளார். இது டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
 
இந்த படம் முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பின்னர் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மேலும் தாமதம் ஆகி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் ரிலீஸாகும் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு மோதும் சூழல் உருவாகியுள்ளது.