ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (09:52 IST)

தீபாவளிக்கு முன்னரே ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’

prince
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தீபாவளிக்கு முன்னரே ரிலீசாகும் என்று தகவல் வெளிவந்துள்ளதால் சிவகார்த்திகெயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரின்ஸ்’. இந்த படம் தீபாவளியன்று அதாவது அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படம் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளியாக உள்ளதால் சிவகார்த்திகெயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை மரியா என்பவர் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது