புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (17:23 IST)

ஆட்டிப்படைக்கும் அந்த நால்வர்: திவாகரனின் தடாலடி பேச்சு!

அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திவாகரன் தனது கருத்தை வெளியிட்டு பரபரப்பை கூட்டியுள்ளார். 
 
மன்னார்குடி கட்சி அலுவலகத்தில் அண்ணா திராவிடர் கழகத்தின் 2 ஆம் ஆண்டு துவக்க விழா பங்கேற்ற அக்கழகத்தின் பொதுச்செயலாளர் திவாகரன் பேசியது பின்வருமாறு...  
 
அண்ணா திராவிடர் கழகம் மத்திய தேர்தல் ஆணையத்தால் போன வாரம் அங்கீகரிக்கப்பட்டது. எப்போது ஜெயலலிதா மறைந்தாரோ, அப்போதே அதிமுகவுக்கு நெருக்கடி தொடங்கி விட்டது. 
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளின் சொந்தங்களுக்கே சீட் தரப்பட்டது. ஆளும் கட்சி என்ற ஒரு தகுதியை தவிர வேறு எந்த ஒரு தகுதியுமே அதிமுகவுக்கு இல்லை.
 
சொல்லி வைத்தது போல ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வெறும் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் வேண்டுமென ராஜன் செல்லப்பா கூறியிருப்பது சரியான கருத்து. 
 
அவர் மட்டுமில்லை, அவரை போல பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மனக் கசப்பில் இருக்கிறார்கள். 4 அமைச்சர்கள்தான் தமிழக அரசை ஆட்டி படைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒற்றை தலைமை பிரச்சனை குறித்து தொண்டர்களின் கருத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.