புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (14:18 IST)

துண்ட விட வேட்டிதான் முக்கியம்; கப்சிப்னு இருக்கனும்: ஜெயகுமார் அட்வைஸ்!

அமைச்சர் ஜெயகுமார் அதிமுகவிற்கு ஒரு தலைமை தேவையா? என்பதை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூத்த கட்சி உறுப்பினரான ராஜன் செல்லப்பா கட்சியில் ஒற்றை தலைமை தேவை என்று கூறி வருகிறார். இன்று தனது ஆதரவாளர்களை கூட்டி ஆலோசனையில் ஈடுப்பட்ட போதும் இதே கருத்தைதான் அவர் மீண்டும் குறிப்பிட்டார். 
 
இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஒற்றை தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும். ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்க இது காலமும் அல்ல. 
அறையில் விவாதிக்க வேண்டியதை அம்பலத்தில் விவாதிக்க கூடாது. அதேபோல் ஒற்றை தலைமை தொடர்பாக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்ய முடியாது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் வேண்டுகோளி படி அதிமுகவினர் கப்சிப்புன்னு இருக்க வேண்டும் என கூறினார். 
 
அதோடு, அதிமுகவில் பிளவு என்பதே இல்லை. திமிங்கலங்களை போல் எதிர்கட்சிகள் ஆளும் கட்சியினரை கலைக்க நினைக்கிறார்கள். தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழாது. தமிழகத்தில் எதிர்ப்பு அலை உள்ளதே தோல்விக்கு காரணம் என பாஜக மத்திய குழுவே கூறியுள்ளது. 
 
நமக்கு துண்டை விட வேட்டிதான் முக்கியம். அண்ணா கூறியப்படி துண்டு என்பது பதவி, வேட்டி என்பது மானம். எங்களுக்கு வேட்டிதான் முக்கியம் என பேசியுள்ளார்.